Posts

காகம் விழுந்து கரைந்தது!

Image
  காகம் விழுந்து கரைந்தது !          யா ராவது கதை சொல்ல வேண்டும் . நான் ஐம்புலன்களையும் ஒன்றுகூட்டி ,   ஏழுலகங்களையும் மறந்து கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் . அதிலும் நம்பமுடியாத உண்மைக்கதைகளை சம்பந்தப்பட்டவர்களது வாயாலேயே கேட்பதென்றால் அது தரும் பேரின்பம் விபரிக்கமுடியாதது ! அது ஒரு போதை நிலை !            எழுபதுகளின் ஆரம்பகாலம் அது !   எந்நேரமும் சின்னச் சின்னக் கனவுகளில் மிதந்தபடியே திரியும் பதின்ம வயதைத் தொடுகிற பருவம் .   எல்லாப் புதினங்களையும் அறிந்து விட வேண்டுமென்கிற அங்கலாய்ப்புடன் அலைந்தபடியேயிருக்கும் மனசு ! எல்லாவற்றையும் இருத்தி வைத்துப் போதிக்கும் காலம் !        கதை கேட் பதற்காகவே நான்,   பெத்தம்மா,    பாட்டா வீட்டிற்கு எப்பவும் ஓடியோடிப்போவேன் . அடைமழை என்றாலும்,    அம்மா தடுத்தாலும் ஏதாவதொரு அலுவலை சாட்டிக்கொண்டு மழைவெள்ளத்திற்குள்ளால் சட்டையை தூக்கிப்பிடித்தபடி,  ...