Posts

Showing posts from August, 2010

பெருநிலம்........

Image
                                                                                                         கனவுச் சாம்பல் படர்ந்த மனிதர்கள் இறந்தபடியே திரிகிறார்கள்... உயிரைத் தேடும் ஆர்வமின்றி தேய்ந்த உடல்களை அலையவிட்டபடி தினமும் அவர்கள் வாழ முனைகிறார்கள்... இறந்தபடியே வாழ்வது இப்போ அவர்களுக்கு வசதியாயிற்று..! மீண்டும் உயிரைச் சுமக்கும் எண்ணமேதும் இப்போதைக்கில்லை.... உயிர்கள் அவர்களுக்கு மிகவும் பாரமாயிற்று.. அவற்றின் காவுதல்கள் பெரும் அபாயமாயிற்று..! அவை பற்றிப் பேசுவதும் விவாதிப்பதும் கூட கடும் பயங்கரவாதமாயிற்று..! மௌனத்தை இறுகப்பற்றியபடி இறந்தபடியே நடப்பது வசதியாகப் போயிற்று...! இறந்தபடியே வாழும் மனிதர்களின் இனப்பெருக்கம் வரலாற்றைத் தொலைத்தபடி சிதறிச் செல்கிறது... சிதைந்த கனவுகளும் நசிந்த நினைவுகளுமாய் ...

இராவணன்

மணிரத்னம் படங்கள் எல்லாமே ஏதோ ஒரு அதிர்வை இரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை – 'இராவணணை'த் தவிர! மௌனராகம், அக்கினி நட்சத்திரம், நாயகன், இதயத்தைத் திருடாதே, தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால், இருவர், குரு......என்று அவரின் இயக்கத்தில் உருவானவை அனைத்தும் இதில் அடங்குகின்றன. புதிய தொழில் நுட்பத்தை, புதிய கமெராக் கோணங்களை, நவீன ஒளியமைப்பு, ஒலியமைப்பு என்று ஏகப்பட்ட விசயங்களில் புதுமைகளை தமிழ் சினிமாவில் புகுத்தி அதிரடித் தாக்கங்களை ஏற்படுத்தியவர். இதனால் மணிரத்னம் படங்களை ஒரு உயர் இரசிகத் தனத்துடன் எதிர்பார்த்துப் போகும் இரசிகர்களுக்கு 'இராவணன்' ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது என்று கூறலாம்! உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால்....ஆகிய திரைப்படங்கள் ஈழத்து அரசியலுடன் இணைந்த கதையாக அமையப்பெற்றிருந்ததனால்....இத்திரைக் கதைகளில் மணிரத்னம் அவர்களின் பிழையான பார்வைகள் கரிய பெரும் கோடுகளாக ஈழத்தமிழ் இரசிகர்களை உறுத்திக் கொண்டிருந்தன என்பது மறுக்க முடியாதது! இது அந்தப் படங்களின் அற்புதமான பக்கங்களையும் இரசிக்க விடாமல் இரசிகர்களை இடையூறு செய்த வண்ணமிருந்தன. அதிலும...

நினைந்து..நினைந்து

Image
அண்ணனா..தீட்சண்யனா..? எனக்குள் என்றும் உயிர்ப்புடன் கிளைவிடும் பெரு விருட்சம் போல..! அவ்வப்போது ஆறுதலுக்காய் .. அதன் கீழ் நான்..! மெல்லிய தென்றலென வருடும் .. குளிர்ந்த இலைகள்.. துயரைத் துடைக்கும் கிளைகள்.. காற்றில் மோதியெழும் இனிய நாதமென.. எப்பவும் ரீங்கரிக்கும் கவிதை வரிகள்.. அல்ல..அல்ல..நீ உதிர்த்த வார்த்தைகள்! வரிகளிற்குள் அடக்கிவிட முடியா மலைப்பு! பேசியவை சில தான்.. பேசாமல் பேசவைத்தவை பல! கைபற்றி அழைத்து..இன்னுமோர் அறிவுலகுள் என் கால் பதிய வைத்த உன் காருண்யம்.. என் நெஞ்சு கரைகிறது..! மலைப்பும் மகிழ்வும் நெருடலுமாய்.... கரைந்து...நெகிழ்ந்து..நாம்! நீ மட்டும் கவிதை வரிகளிற்குள் .. எப்பவும் அடங்கி விடாமல்..!! - சந்திரா. இரவீந்திரன் .