Posts

Showing posts from August, 2015

நீ

Image
நீ  விழிநீரைத்  துடைத்தெறி விரைந்தெழு வெறுந்தரையில் கோலமிடும் விரல்நகங்கள் எத்தனை நாள் தேயாமல் சதை காக்கும் நீயும் நீயும் வேறுவேறென்றான பின் நீங்களென்ன? நீயெனும் தீயை அணைக்கும் மாயையை களைந்தெறி நெஞ்சு நிறையச் சுவாசி நிதானம் கொள் தீராவலிகளை தீயினுள் பொசிக்கிடு.. தீர்க்கமாய் யோசி தலைக்கு மேலே வானம் உனக்காய் விரிந்து கிடக்கிறது! கைகளை வீசி நட கனவுடலைக் கலைத்து விடு கால்களின் கீழ் பூமி உனக்காய் காத்துக் கிடக்கிறது!  சுயம் காண் உள்ளினுள் தெரியும் ஒளி நெஞ்சு நிமிர்த்தி நிசங்களை நேர்கொள் உனக்கான காலம் உன்னருகில் நிற்கும் திரும்பிப் பார் தலைகீழ் உலகம் சிரிப்பூட்டும் நீ இப்போது நீயாகிறாய்! - சந்திரா இரவீந்திரன்