நீயாகிப்போகும் நான்!
நீயாகிப்போகும் நான்! ------------------------------------- காலையும் மாலையுமான நியமத்தளை அறுந்தெறிந்து நெடுநாளாய் அலைகிறது மனம்! ஊனுருகித் தினம் உயிர் கரைந்து நினைவுகளால் நிரம்பித் துடிக்கிறது தினம்! மேனியெங்கும் தணல் மின்னலாய் கோடிழுக்கும் காமத்தீயின் சுடர்! மோகப் பெருநதியின் ஊற்றுக்கால் உடைந்துந்தன் மார்பில் புதைந்தழிந்து நீயாகிப் போகும் நான்! நெற்றிக்கண் திறவாதுன் முகம் கட்டி முடித்த கருங்குழல் ஒற்றைப் பொன்முடியின் ஓர் நுனியசைவில் சுற்றிச் சுழன்றடிக்கும் காற்று விட்டுவிடா விதியின் பெருங்கரத்தில் பிரபஞ்சப் பெருவெள்ளம்! மோனப் பெருவெளியின் மையம் வான முகடு தொடும் மலைகள் காடுகளும் நதிகளும் கடல்களுமானதுன் காலம்! ஆக்குவாய் நீ காப்பாய் பின்னின்றழிப்பாய் அருள் தருவாய் தாக்குமென் தேகப்பெருந்தீயைப் போக்குவாய் புகுந்திடுவ...