வாசம்
ம ழையின் பேரிரைச்சலும், சுழன்றடிக்கும் காற்றின் 'ஊய்ங்..ஊய்ங்' என்ற ஓசையும், நின்ற இடத்திலேயே தலையைச் சிலுப்பி பேய் போல உரு ஆடும் வீதியோரத்து மரங்கள் எழுப்பும் கூச்சலுமாய்; அந்தச் சிறு நகரம் வெலவெலத்துப் போயிருப்பது போல் தோன்றியது! வீதியோரங்களில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மழையில் நனைந்து, காற்றில் சிதறிய இலைகளும் குப்பைகளும் அதன்மேல் படிந்து போக, அவை உருமாறிப்போய் அநாதரவாக நின்றிருந்தன. அவள் சாளரத்திற்கு வெளியே நீண்டிருக்கும் தன் தலையை மறுபக்கம் திருப்பி சுற்றுமுற்றும் தன் கண்களை சுழலவிட்டாள். கனத்த மழைத்தூறல்கள் அவள் தலைமுடியை நனைத்தன. அதுபற்றி அவள் கவலையேதும் கொள்ளவில்லை. ஆள்நடமாட்டமே அற்றுப் போய்க்கிடந்த அந்த வீதியின் தோற்றம் தான் அவளுக்குள் ஏனோ இனம்புரியாத துயரை ஏற்படுத்தியது! அவள் தலையை உள்ளேயிழுத்துவிட்டு மெதுவாக நடந்து வந்து கதிரையில் இருந்த துவாலையால் தன் ஈரமான தலைய...