Posts

Showing posts from November, 2014

பிறந்தநாள் வாழ்த்து..!

Image
அறுபதாவது அகவைகானும் ஈழத்தலைவனை வாழ்த்தி. ......... அருமறை நான்கும்  அட்டனைக்கால் போட்டு  அமர்ந்திருக்கும் மாமுனி - எங்கள்  தங்கத் தலைவர் பிரபாகரன் நாநுனி  திங்களின் உருவாய்த்திகழும் - எம்  தலைவன் தித்திக்கப் பிறந்தநாளில்  எத்திக்கும் முரசறைந்து எதிரொலி செய்வோம்!  எங்கள் வாழ்த்துக்கள் முழங்க என்றும்... ஏற்றம் பெற தமிழர் குலம்  சீற்றம் கொண்ட சித்தராய் வந்தார் காற்றினில் கலக்க கார்த்திகை மாதம்  கருவினிலிருந்து வெளியினில் வந்தார் சாந்திய திகதியன்று இருபத்தி ஆறு என்று  கூற்றியலுக்கரும் நாட்காட்டி. போற்றியே எம் தலைவன்  ஏட்டிலே எழுந்து நிற்கும்  பாட்டிலே பகர்வோம் வாழ்த்து! அறுபது  அகவையென்று  அகத்திலே மகிழ்ச்‌சி கொண்டு  அண்ணனை வாழ்த்துகிறோம்  ஆயிரம் முறை நீ வாழ்க என்று ! அகிலத்தில் எளிவிளக்காய்  தமிழர் தம் வாழ்வுதனில்  அவதரித்த தேவமகன்  தேர் இருத்தி புலிக்கொடியை  தேசமதை காத்த மகன்  பாரினிலே பகை நடத்தி பாரதத்தை வெ...

ஒரு போராளியின் உள்ளக்குமுறலும், ஏக்கமும், நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும்!

Image
பிறந்தநாள் வாழ்த்து! எமக்கு இறைவன் தந்த பெரும் சொத்தே! எமது இனத்தைக் காக்கப் பெரும் விருட்சமாகிய எமது அண்ணனே! காலம் எமக்களித்த தமிழீழத்தின் தாயானவனே! தமிழீழத்தின் துயர் துடைக்கவென உங்களை இந்நாளில் பிரம்மன் தந்தானண்ணா! உம்முடன் நாம் உம் பிறந்தநாளில் உணவுண்டு களித்தோமண்ணா! இப்போ உம் பிறந்தநாளில் - உம் வதனம் தேடி ஏங்கித் தவிக்கின்றோம்! எங்கள் அன்பான அண்ணனே! எங்கு தான் நீங்கள் இருந்தாலும் மறுபடியும் உங்கள் பிறந்தநாளில் உங்கள் கரத்தால் நாம் உணவுண்ண வரவேண்டும்! என்றும் அண்ணனின் புகழ் வாழவேண்டும்! எங்கள் அண்ணன் பாதத்தின் பின் எம் பாதங்கள் பதிய வேண்டும்! என்றென்றும் எமக்கு வழிகாட்டும்  நாயகனாய் திகழ வேண்டும் ! அடுத்த வருடம் உங்களருகில் நாம் உங்களை வாழ்த்துவோமண்ணா! தங்களுக்கு என்றுமே நம் சிரம்தாழ்ந்த பலவண்ணப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எங்கிருந்தாலும் தங்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களண்ணா! -போராளி செ.நிமலன்