பிறந்தநாள் வாழ்த்து..!
அருமறை நான்கும்
அட்டனைக்கால் போட்டு
அமர்ந்திருக்கும் மாமுனி - எங்கள்
தங்கத் தலைவர் பிரபாகரன் நாநுனி
திங்களின் உருவாய்த்திகழும் - எம்
தலைவன் தித்திக்கப் பிறந்தநாளில்
எத்திக்கும் முரசறைந்து
எதிரொலி செய்வோம்!
எங்கள் வாழ்த்துக்கள் முழங்க என்றும்...
ஏற்றம் பெற தமிழர் குலம்
சீற்றம் கொண்ட சித்தராய் வந்தார்
காற்றினில் கலக்க கார்த்திகை மாதம்
கருவினிலிருந்து வெளியினில் வந்தார்
சாந்திய திகதியன்று இருபத்தி ஆறு என்று
கூற்றியலுக்கரும் நாட்காட்டி.
போற்றியே எம் தலைவன்
ஏட்டிலே எழுந்து நிற்கும்
பாட்டிலே பகர்வோம் வாழ்த்து!
அறுபது அகவையென்று
அகத்திலே மகிழ்ச்சி கொண்டு
அண்ணனை வாழ்த்துகிறோம்
ஆயிரம் முறை நீ வாழ்க என்று !
அகிலத்தில் எளிவிளக்காய்
தமிழர் தம் வாழ்வுதனில்
அவதரித்த தேவமகன்
தேர் இருத்தி புலிக்கொடியை
தேசமதை காத்த மகன்
பாரினிலே பகை நடத்தி
பாரதத்தை வென்ற மகன்
பாசமுடன் புலிப்படையை
பாங்குடனே வளர்த்த மகன்
படைத்துறையில் பள்ளியையும்
பாலகர்கள் சோலையையும்
பார்புகழ வளர்த்த மகன்
பதினாறில் படை தொடங்கி
அறுபதை அடைந்துவிட்டாய்
அண்ணா உன் அன்புதனில்
அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்.
அலைகடலாய், தொடர்மழையாய்
அடுக்கடுக்காய் வாழ்த்துகிறோம்...
வரலாறாய் வாழ்ந்திடுவாய்
வாழ்வதனில் தமிழர்
வாழ்க வாழ்க பல்லாண்டு
வாழ்க உன் புகழ் நூற்றாண்டு!!
ஆக்கம்
சி. கலைவிழி (போராளி)

Comments