ஒரு போராளியின் உள்ளக்குமுறலும், ஏக்கமும், நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும்!

பிறந்தநாள் வாழ்த்து!

எமக்கு இறைவன் தந்த பெரும் சொத்தே!
எமது இனத்தைக் காக்கப் பெரும் விருட்சமாகிய
எமது அண்ணனே!
காலம் எமக்களித்த
தமிழீழத்தின் தாயானவனே!
தமிழீழத்தின் துயர் துடைக்கவென
உங்களை இந்நாளில்
பிரம்மன் தந்தானண்ணா!

உம்முடன் நாம் உம் பிறந்தநாளில்
உணவுண்டு களித்தோமண்ணா!
இப்போ உம் பிறந்தநாளில் - உம்
வதனம் தேடி ஏங்கித் தவிக்கின்றோம்!

எங்கள் அன்பான அண்ணனே!
எங்கு தான் நீங்கள் இருந்தாலும்
மறுபடியும் உங்கள் பிறந்தநாளில்
உங்கள் கரத்தால் நாம்
உணவுண்ண வரவேண்டும்!

என்றும் அண்ணனின் புகழ் வாழவேண்டும்!
எங்கள் அண்ணன் பாதத்தின் பின்
எம் பாதங்கள் பதிய வேண்டும்!
என்றென்றும் எமக்கு வழிகாட்டும்  நாயகனாய்
திகழ வேண்டும்
!
அடுத்த வருடம் உங்களருகில் நாம் உங்களை
வாழ்த்துவோமண்ணா!
தங்களுக்கு என்றுமே நம் சிரம்தாழ்ந்த
பலவண்ணப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்கிருந்தாலும் தங்களுக்கு எங்கள்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களண்ணா!

-போராளி
செ.நிமலன்

Comments

Popular posts from this blog

காகம் விழுந்து கரைந்தது!

காற்று – சிறுகதை

காத்தவராயரும் இலந்தை மரமும்