Posts

Showing posts from 2019

நீயாகிப் போகும் நான்

நீயாகிப் போகும் நான் காலையும் மாலையுமான நியமத்தளை அறுந்தெறிந்து நெடுநாளாய்  அலைகிறது மனம்! ஊனுருகித் தினம் உயிர் கரைந்து நினைவுகளால் நிரம்பித் துடிக்கிறது கணம்! மேனியெங்கும் தணல் மின்னலாய் கோடிழுக்கும் காமத்தீயின் சுடர்! மோகப் பெருநதியின்  ஊற்றுக்கால் உடைந்துந்தன் மார்பில் புதைந்தழிந்து ;  நீயாகிப் போகும் நான்! நெற்றிக்கண் திறவாதுன் முகம் கட்டி முடித்த கருங்குழல் ஒற்றைப் பொன்முடியின்  ஓர் நுனியசைவில் சுற்றிச் சுழன்றடிக்கும்; காற்று விட்டுவிடா விதியின் பெருங்கரத்தில் பிரபஞ்சப் பெருவெள்ளம்! மோனப் பெருவெளியின் மையம் வான முகடு தொடும் மலைகள் காடுகளும் நதிகளும் கடல்களுமானதுன் காலம்! ஆக்குவாய் நீ காப்பாய்  பின்னின்றழிப்பாய் அருள் தருவாய் தாக்குமென் தேகப்பெருதீயைப்  போக்குவாய் புகுந்திடுவாய் என்னுள்ளத்தின் உள்ளே நீக்கமற நிறைவாயென் நேசத் திருமேனியனே! ஞாலக் கதை படைப்பாய் கரைந்தழியும் காலத்தின் யாப்பினைப் புனைவாய்;  வானக் குடை பிடித்து வலம் வருவாய் ஆயினும் நீயறிவாயா? நாளும் பொழுதுமற்றதுன் ஆழச் சாகரத்தில் தினம் மூ...
      பெயர் தெரியாதவன்         மூன்று நாட்களாக அவனைக் காணவில்லை!! !         போகும் போதும் வரும் போதும் பார்க்கிறேன். அவன் இல்லை .  அவன் இனி வரமாட்டான் போலும்.      யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒருவித துயரம் மனதை முட்டி நிற்கிறது!        ஒரு வெயில் நாள் அது. அவசரமாக நான் வேலைத்தளத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கும் போது அவன் அந்த வெளிச்சுவரோரம் அமைதியாக உட்கார்ந்திருப்பது தெரிந்தது. எங்கோ ஒரு தொலைவைப் பார்த்துக் கொண்டிருந்தான். முகம் முழுவதும் பல மாதங்கள் மழிக்கப்படாத தாடி! நீண்டு வளர்ந்த தலைமுடி. தடித்த உதடுகளை இறுக மூடியபடி உட்கார்ந்திருந்தான்.      மிக மோசமான அழுக்குப் படிந்த உடைகளை அவன் அணிந்திருந்தான். கண்களிற்குள் துயரமும் சலிப்பும் நிறைந்து கிடந்தது! ஐம்பந்தைந்து வயதைக் கடந்திருப்பான் என்று தோன்றியது.     அவனைக் கடந்து நான் வேலைத்தலத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நாட்களும் அவன் எனக்கு 'குட்ஈவினிங்' சொல்லி சலாம் வைக்கிறான். வேலை முடிந்து வெளியே ...