Posts

காற்று – சிறுகதை

காற்று கனவுகள் இனிமையாக இருந்தன. மேகப் பொதிகளுனூடாய், பசும் புற்களின் மேலாய், வியர்வையின் வாடையற்ற வாசனைத் தரைகளின் வணணப்பூச்சுகளினிடையாய், சொர்க்கத்தின் கூரையைத் தொடுவதும் குதிப்பதுமாய் கனவுகள் மிதந்தன! மாலைக் குளிரின் சிலிர்ப்பும், நிலத்தின் அடியிலிருந்து வீசும் வெயிலின் கடுப்பும் ஆறாமல் உடலை இரண்டு படுத்திப் கொண்டிருந்த போதும் கனவுகள் விரிந்து கொண்டேயிருந்தன! நியாமியின் பகல் வெயிலும் இரவுக் குளிரும் ஒன்றிற்கொன்று ஒட்டாமல் மனிதர்களைத் தூக்கியடித்துக் கொண்டிருந்தது. சற்று முன்னர்தான் மரங்களிலிருந்து தாவிக் குதித்து இறங்கி வந்தவர்கள் போல ஒவ்வொருவரின் தோற்றமும்! அந்தக் கிழட்டு விடுதியின் மொட்டை மாடியில் நின்று பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கும். அதற்காகவே காத்திருப்பது போல இரவு உணவருந்தும் நேரம் பார்த்து அவள் மொட்டை மாடிக்குப் போய் விடுவாள். சூரியன் மிகவும் ஆரவாரப்படாமல், சின்ன வட்டத்துக்குள் அடங்கி ஒளி முழுவதையும் பூமியில் பாய்ச்சிக்களைத்த தோரணையில் பவ்வியமாய் ஒதுங்கிப் போய் நிற்பான்! விழிகளை விரித்து விரித்துப் பார்த்தாலும் மணிகள் சுருங்காது! வீதியில் கூக்க...

நிலா…நீ …வானம் காற்று மழை…

,af;Fdh; Nrud; mth;fspd; ~nghf;fp\k;| jpiug;glk; NruDf;NfAhpa jdpj;Jtj;NjhL ,irahYk; fijahYk; ,ioe;J nkOfp cap&l;b cUthf;fg;gl;bUf;fpwJ. glj;jpy; fjhehafd; fjhehafp kl;Lky;y … .midj;Jj; Jizg;ghj;jpuq;fSk; fijapd; ,d;DnkhU fjhehafh;fs; NghyNt gilf;fg;glbUf;fpwhh;fs;. Nrudpd; mg;ghthf tUk; tp[aFkhh; jd; nkd;ikahd ebg;ghy; jd; fjhghj;jpuj;ij vq;Nf xU cauj;jpy; nfhz;L Ngha; xspu tpl;bUf;fpwhh;. mth; kl;Lky;y Nrudpd; jk;gpahf tUk; ,isQd; $l jdf;Fhpa rpwpa fhl;rpg;gLj;jy;fspYk; neQ;rpy; gjpAk; ghj;jpukhf mike;J tpLfpwhh;. gj;kgphpahTk; NruDk; re;jpj;Jg; goFk; fhl;rpfis tpl mth;fs; gphpe;j gpd; tajhfp tUk; gj;kgphpah jd; ebg;ghy; glj;jpd; ,Wjpg; gFjpia mg;gbNa jdjhf;fpf; nfhz;L neQ;rpy; epiyahfp tpLfpwhh;! Nrud; gw;wp mjpfk; nrhy;y Ntz;LNkh vd;W Njhd;WfpwJ! Nrudpd; ,af;fj;jpYk; ebg;gpYk; cUthFk; jpiug;glq;fs; gw;wpr; nrhy;y thh;j;ijfs; mjpfk; ,y;iy … ! ghh;f;f Ntz;Lk; … ..,irNahL ,ioe;J … .,jaj;jpy; gjpe;J tpLk; glk;. el;G … .fhjy; … md;G …… ,itnay;yhtw;wpw;Fk; Nkyhf … ..,d;Dk; ...

பொக்கிஷம் திரைப்பட இயக்குனர் சேரன் அவர்களின் உரை……

புலம் பெயர்ந்த கடவுளர்fs ! இடம் : புலம் பெயர் மண்ணிலுள்ள ஒரு கடவுள் ஸ்தலம்)கடவுளர்கள் அவரவர் அடையாளங்களைப் பிரதிபலிப்பதாகவும் அதே நேரம் மேலைத்தேய நவீன உடையமைப்புகளுடனும் காட்சியளிக்கிறார்கள்) சிவன்:- (சடாமுடி, கங்கை, நாகம், புலித்தோல் ஜீன்ஸ்….நவீனரக சப்பாத்துடன் காட்சியளிக்கிறார் ) பார்வதி :- ( ஒரு நவீன அலங்காரத்துடன் நிற் கிறா) சிவன்:- பார்வதி…..பார்வதி…..எங்கே உன் சின்னமகன் முருகனைக் காணவில்லை..? இங்கே அவனின் பக்தர்களெல்லாம் வெகு நேரமாக மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள்….அவன் அவர்களைக் கவனிக்காமல் அப்படியென்ன செய்துகொண்டிருக்கிறான்? பார்வதி :- முருகன் computer ல் ஏதோ விளையாடிக்கொண்டிருக்கிறான்…கூப்பிட்டாலும் வருகிறானில்லை…..அவனுக்கு அதே வேலையாகப் போய்விட்டது! கணபதி:- இல்லையம்மா…அவன் வள்ளி தெய்வானை என்ற இரண்டு பெண்களுடன் Internet Chatting செய்து கொண்டிருக்கிறானம்மா. பார்வதி :- சிவ சிவா…. சிவன் :- நான் இங்கு தானிருக்கிறேன்….என்னை எதற்காக இப்போ அழைக்கிறாய்? பார்வதி :- அவனைக் கூப்பிடுங்கள்….இப்படியே computer ம் Playstation ம் என்று அவனின் பொழுதுகள் போய்விடுகிறது….படிப்புமில்லை….பாட்டுமி...

நெஞ்சை உருக்கும் உண்மை நிகழ்வு!

Image
நெஞ்சை உருக்கும் உண்மை நிகழ்வு சுற்றமேயானாலும் அவன் முற்றத்தில் ஒரு கால் வைக்கும் முன் அவன் முகத்தில் சம்மதத்தை எதிர்பார்க்கும் நாகரீகம் உடையோர் நாம். எம் படலை தாண்டி, வாசற்படியேறி, எம் நெஞ்சின் மீது தன் சப்பாத்துக்கால்களை வைத்து எம்மைக் கேள்வி பல கேட்க, இந்த சிங்கள இராணுவக் காடையர் கூட்டம் எப்போது யாரிடம் பெற்றது அனுமதியை? ஏங்கு கற்றன இந்த உயர் பண்பை? யார் புகட்டினார் இந்த நாகரீகத்தை? நாம் அடங்கி அமுங்கிப்போன அந்தக் காலங்களில் எம்முடன் அடங்கிப் போன இரத்தமும் சதையும் உணர்வுமான கதைகள் ஆயிரம் ஆயிரம்! அந்த ஆயிரத்தில் இதுவும் ஒன்று. இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் எனப்படும் பிரதேசத்தில் இடம்பெற்ற உண்மைகள் இவை. ஆயிரம் அரைகுறை சமாதானம் வந்தென்ன ஆறுமா எம் ஆன்மாக்கள்? ஆழ அல்லவோ புதைந்து விட்டது அவனது கொலைவெறி பிடித்த பார்வை! அந்தப் பிசாசுகளின் கொலை வெறியை நேரில் கண்ட பதினொரு வயதுப்பெண்ணின் கதையிது! அவளிடமிருந்து அந்த உண்மைகளைக் கேட்டறிந்தவர் - கதைவிளம்பி, ஈழம். தொகுத்து தருபவர்:- சந்திரா. ரவீந்திரன்.) எங்கட அப்பா…..! எங்கட அப்பா மூதூர் ~டவுனிலை ஒரு சின்னப் பல சரக்குக் கடை வைத்திருந்த...

நானுன்னை இனி எங்கு தேடுவேன்?

கடல் கொந்தளித்தது ஜனங்களின் மனங்களைப் போல! பனிக்காற்று உடலைத் துளைத்தது கூரிய ஊசிகளைப் போல! மேகம் நிலவுக்கு விடை கொடுத்து மூளியாய் இருண்டு கிடந்தது! வலது கண் அடிக்கடி துடித்தது! கனவுகள் திரைகளாய் து}க்கத்தை மறைத்தது! இதயம் தாய் மண்ணை நினைத்து தவித்தது! நாழிகள் மரத்தனமாய் ஓட மறுத்தது! மின்னல் கோடிட்டு இடியொன்று முழங்கியது! கம்பிகளுடாய் சேதிகள் வந்தது களத்தில் அவன் காவியமானான் என்று!!! கடலும் காற்றும் பனியும் மேகமும் நிலவும் உலக ஒலிகளும் எங்கோவொரு அந்தத்தில் அடைந்து போயின! ஸ்தம்பித்த பூமியில், ஜில்லிட்ட குருதியில் சபா.......! என்ற கூவலின் நீண்ட கேவல்! மௌனத்தின் விறைப்பில், ஏமாந்த கோபத்தில் மயூரன்...... என்ற வினோதமான விக்கல்! என் இனிய உடன் பிறப்பே! ஆசைத் தம்பியே! ஆழகிய அந்த ஈழ பூமியில் நீயெங்கே உறைந்து கொண்டாய்! கடல் கடந்து வான் பறந்து மலை தாண்டி மண் குதித்து படை மீறி வந்தாலும் நானுன்னை இனி எங்கு தேடுவேன்! தம்பி! நானுன்னை இனி எப்படித் தழுவுவேன்! கொடிய பசியுடன் கூடவே தோழருமாய் திடுமென்று என் வாசலை தட்டிய போதெல்லாம் நானிட்ட சாதமும் சாதாரண குழம்பும் ருசியென்று உண்பாயே! ஒரு கையில் சுமையேந்தி ...