ஞாபகங்கள் பேசும்
நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோயிலும் நானும் ! ப ருத்தித்துறை நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோயில் ' வெளிமடை ' என்றால் அப்பா என்ன பாடுபட்டாவது கொழும்பிலிருந்து விடுமுறையெடுத்து ஊர் வந்து விடுவார் . அக்காலங்களில் அவர் விரதமிருந்து நெல்லண்டை அம்மன் கோயிலின் முக்கிய வைபவங்களிற்கெல்லாம் எங்களையும் அழைத்துச் சென்று வருவது வழமை . என் பதின்மவயதின் ஆரம்ப காலங்களான எழுபதுகளில் கோயில் திருவிழாக்கள், வெளிமடை , காய்மடை பூமடை போடுதல், வேள்வி, அன்னதானம், காவடி, கூத்து என எல்லாம் அங்கு சிறப்பாகவும் கோலாகலமாகவும் பெருந்திரளான பக்தர்களோடும் நடந்தேறும் . இந்தக் கோயிலிலிருக்கும் அம்மனின் பெயரை எமது வீட்டில் உச்சரிக்காதவர்களே கிடையாது . குறிப்பாக இக்கோயில் என் தந்தையின் வழிவழி வந்த கோயில் என்று சொல்வார்கள் . என் அப்பா அவரின் பெற்றோருக்குத் திருமணமாகி பத்துவருடங்கள் கழ...