Posts
காத்தவராயரும் இலந்தை மரமும்
- Get link
- X
- Other Apps
(ஞாபகங்கள் பேசும் ) ப ருத்தித்துறையில் ஓராங்கட்டைச் சந்தி என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது . பருத்தித்துறை நகரின் மையத்திலிருந்து பிரதான வீதிவழியாக யாழ் நோக்கிப் பயணித்தால் வரும் முதலாவது மைல் சந்தி அது . அந்தப் பிரதான முச்சந்திக்கு நிறையக் கதைகள் இருக்கிறது . நகரின் மேற்கிலிருந்கும் ஊர்களிற்குள் நுழைய வேண்டியவர்கள் அனைவரும் பஸ்ஸிலிருந்து இறங்கிக் கொள்ளும் பிரதான சந்தியும் அது தான் . பெரும்பாலும் நகருக்குள் பிரவேசிக்கும் புதிய பயணிகளுக்கு ஊர்களின் வழியை அடையாளம் காட்டும் போது இந்த ஓராம்கட்டைச் சந்தியிலிருந்து தான் வழிக்குறிப்புகள் ஆரம்பமாவது வழமை . இந்தச் சந்தியிலிருந்து மேற்கு நோக்கி நீளமாக நகரும் தம்பசெட்டி வீதி வழியாக நடந்தால் நிறையப் புதினங்களைப் ; பார்த்தவாறே ஏராளமான சிற்றூர்களுக்குப் போய்ச் சேரலாம் . ஓராங்கட்டைச் சந்தியிலிருக்கும் பென்னம்பெரிய மெத்தை வீடு ...