'அடிசில்'
'அடிசில்' இலக்கியச் சுவை கமழும் உணவு நாட்காட்டி
காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக 'அடிசில்' என்ற பெயரில் தமிழ் இலக்கிய ரசம் சொட்டும் சுவைமிக்க ஒரு கவிதை நாட்காட்டி என் கைகளில் புரண்டு கொண்டிருக்கிறது.
'அடிசில்' என்றால் சோறு, அரிசி, அடுக்களை....எனப் பல பொருள்களைத் தருகின்றன தமிழ் அகராதிகள்.
"சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயில் நெய் பாலால்......' என்று சேக்கிழாரின் பெரிய புராணத்தில் ஒரு வரி வருகிறது.
ஆண்டாள் பாடிய நாச்சியார் திவ்ய பிரபந்தத்தில் அடிசில் பற்றி ஒரு வரி வருகிறது.
சங்க காலத்து இலக்கியப் பாடல்களில் அநேக இடங்களில்; உணவின் சுவை நயக்கக் கையாண்ட சொல்லாக இது வருகிறது.
நாட்காட்டியை இன்னமும் சுவரில் தொங்கவிடவில்லை. அதை தொங்க விடுவதா அல்லது நினைத்தவுடன் புரட்டிப் பார்க்கும் வகையில் கைகளிற்குக் கிட்டவாகவே வைத்திருப்பதா என்று இன்னும் நான் தீர்மானிக்கவுமில்லை.
முதற்பக்கமே ஒரு வெண்கல தூக்குச்சட்டியோடு இலக்கியத்தைச் சமைத்துண்ணத் தயாராக இருக்கிறது!
பிரசாந்தி சேகரத்தின் ஒரு அருமையான நினைவுப் பகிர்வினை அள்ளிக் கொண்டு விரிகிறது சுவை சொட்டும் தமிழ் நாட்காட்டி!
அது....
//ஒரு காலைக்காட்சி. வெள்ளைச் சட்டையில், இரட்டைப் பின்னல் போட்ட இரண்டாம் வகுப்பு மாணவி நான். சைக்கிள் மிதித்து விரைகிறேன். வேம்பும் வாகையும் பனையும் நிழல் தர, மா, பலா, வாழை, தென்னை கனிகள் நிறைந்து செழித்த ஊர் அது. பாடசாலை போகும் பாதை. ஓவ்வொரு வீட்டைக் கடக்கும் போதும் காற்றில் ஒவ்வொரு வாசம். ஒரு வீட்டில், தேங்காய் பாலில் எலுமிச்சை பிழிந்து விடும் வாசம் - அது 'பாற்சொதி'. இன்னொரு வீட்டில், செத்தல் மிளகாய் பொரிக்கும் வாசம்- அது 'இடித்த சம்பல்';.. அடுத்த வீட்டில், நல்லெண்ணெய் கல்லில் முறுகும் வாசம்- அது தாளித்த 'மஞ்சள் தோசை'. எதிர் வீட்டில் இடித்து வறுத்த சிவப்பு அரிசிமா தேங்காய்ப்பூவுடன் மூங்கில் குழலில் அவியும் வாசம் - அது 'புட்டு'. எனக்குப் பிடித்த உணவு. ரெயில் தண்டவாளத்தின் அருகேயுள்ள தென்னோலைகளால் வேய்ந்த வீட்டில், சின்ன வெங்காயமும் பச்சை மிளகாயும் வதங்கும் வாசம் - அது 'முட்டைப்பொரியல்'........ //
இப்படியே போகிறது பிரசாந்தி சேகரத்தின் வாசனை நிறைந்த வாழ்வின் நினைவுகள்..!
நானும் ஊருக்குள் போய் வந்த நினைவு வாட்டுகிறது. ஒடியல் கூழ், தோசை, கத்தரிக்காய் பொரியல், வெந்தயக்குழம்பு, தேங்காய்ப்பால் அப்பம், நாட்டுக்கோழிக் குழம்பு, பழைய சோறு, சர்க்கரைப் பொங்கல்....என்று எமது ஈழத்தமிழர்களின் உணவுகளும், கம்மாங்கூழ், புளிமுளம்....என்று தென்னிந்தியத் தமிழர்களின் உணவுகளுமாக பன்னிரண்டு மாதங்களும் கமகமக்கிறது!
உணவு வகைகளை அதன் சுவையோடு கலந்து எழுதிய லா.ச..ரா, அம்பை, நாஞ்சில்நாடன், செங்கையாழியான், கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன், பெருமாள்முருகன், பிரபஞ்சன், தஞ்சை ப்ரகாஷ், சுப்ரபாரதி மணியன் ஆகிய எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகளிலிருந்து அந்தந்த உணவு தொடர்பான அவர்களது படைப்பு வரிகளைக் கொட்டி, ரோஹிணி மணி அவர்களின் கை வண்ணத்தில் உருவான வர்ண ஓவியங்களைக் கலந்து, சமைத்து ஒவ்வொரு பக்கங்களும் ஒவ்வொரு மாதங்களாக உருவாகியிருக்கிறது.
இதனை எழுதித் தொகுத்து பதிப்பித்திருக்கும் பிரசாந்தி சேகரம் அவர்களை பதின்நான்கு வருடங்களிற்கு முன்னர் அவரை ஒரு
சின்னப் பெண்ணாக ஐபிசி தமிழ்வானொலி
நிகழ்ச்சித்தயாரிப்பை நான் செய்து கொண்டிருக்கும் போது
கண்டிருக்கிறேன். அந்தச் சின்னப் பெண்ணா இத்தனை ரசத்தைக் கொட்டி இதனைச் செய்திருக்கிறார் என்பதில் என்னுள் ஒரு வியப்பு! ஐ.பி.சி தமிழ் வளர்த்த குழந்தைகளில் அவரும் ஒருவர் என்பதில் அளவிலா மகிழ்ச்சி!
பிருந்தா சேது அவர்களின் இலக்கியத் தேடல் இந்த இலக்கிய நாட்காட்டியின் அழகுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அவரின் ஆழ் தேடலைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
இதன் வடிவமைப்பு, உதவி, மற்றும் ஆலோசனைகளை மு.கணேசன்(இலச்சினை, எழுத்துரு), சந்தோஷ் நாராயணன், பார்த்திபன், விநோதினி சச்சிதானந்தன் (ஒடியல் கூழ்), பிருந்தா சேது (அட்டைப்படம்) கணேஷ் ராமலிங்கம் (புகைப்படம்) ஆகியோர் இணைந்து செய்திருக்கிறார்கள்.
ஆலோசனைக் குழுவாக-
ரீனா ஷாலினி, பரமேசுவரி திருநாவுக்கரசு, சுகுமாரன், நாராயணன், உமா வரதராஜன், தீபா ஜானகிராமன், சாஹிதா, இரவி அருணாசலம், சீனிவாசன் நடராழன், ஆ.இரா.தவேங்கடாசலபதி ஆகியோர் பங்களித்திருக்கிறார்கள்.
இதில் சற்று கூடுதலாகக் கவனிக்கப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றும் சில விடயங்களும் இருக்கின்றன.
ஓன்று – சில பக்கங்களின் வர்ணங்களில் அடிபட்டுப் போகும் எழுத்துக்களின் வர்ணங்கள் பற்றிக் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அடுத்தது:- சில உணவு வகைகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய சில பொருட்களை ஓவியத்தில் அழுத்திக் காட்டியிருக்கலாம்
இது முதல் முயற்சியில் உருவான முதல் இலக்கியச் சமையல் நாட்காட்டி.
என்பதில் இலக்கிய இரசிகர்களும், உணவுப் பிரியர்களும் வரவேற்று அனுபவிக்க வேண்டிய ஒரு பதிப்பு. நாட்காட்டியில் நாட்கள் தன்பாட்டில் நகருகிறது. சுவை நாக்கில் நின்றுவிடுகிறது.
அடுத்த வருடத்திற்கான நாட்காட்டியின் வாசனை இப்பொழுதே கற்பனையில் மிதந்து வருவது போல......
பிரமை தான். உண்மையாகவும் இருக்கட்டுமே!
-சந்திரா இரவீந்திரன்

Comments