Posts

      பெயர் தெரியாதவன்         மூன்று நாட்களாக அவனைக் காணவில்லை!! !         போகும் போதும் வரும் போதும் பார்க்கிறேன். அவன் இல்லை .  அவன் இனி வரமாட்டான் போலும்.      யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒருவித துயரம் மனதை முட்டி நிற்கிறது!        ஒரு வெயில் நாள் அது. அவசரமாக நான் வேலைத்தளத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கும் போது அவன் அந்த வெளிச்சுவரோரம் அமைதியாக உட்கார்ந்திருப்பது தெரிந்தது. எங்கோ ஒரு தொலைவைப் பார்த்துக் கொண்டிருந்தான். முகம் முழுவதும் பல மாதங்கள் மழிக்கப்படாத தாடி! நீண்டு வளர்ந்த தலைமுடி. தடித்த உதடுகளை இறுக மூடியபடி உட்கார்ந்திருந்தான்.      மிக மோசமான அழுக்குப் படிந்த உடைகளை அவன் அணிந்திருந்தான். கண்களிற்குள் துயரமும் சலிப்பும் நிறைந்து கிடந்தது! ஐம்பந்தைந்து வயதைக் கடந்திருப்பான் என்று தோன்றியது.     அவனைக் கடந்து நான் வேலைத்தலத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நாட்களும் அவன் எனக்கு 'குட்ஈவினிங்' சொல்லி சலாம் வைக்கிறான். வேலை முடிந்து வெளியே ...
Image
"கனவுகள் அற்ற சோம்பேறிகளால் அவன் சிறகுகள் வெட்டப்படுகின்றன.ஆனால் அவன் நெடுங்கனவுகள் அவனை ஒரு மீட்பரைப்போல மீட்டெடுத்துக்கொண்டே இருக்கும்" Monday, January 30, 2017 சந்திரா  ரவீந்திரன் படைப்புக்கள் இலக்கியப் படைப்புக்கள் என்னும் அழகான, அறிவின் உயர்வான, கவர்ச்சி மிக்க  சிருஷ்டிப்புகள்  மனோதிடத்துடன்  உள்ள ஒருவருக்கே வெளிப்படுகின்றன. அதிலும் ஒரு பெண், தான் பெண்ணாகப்  பிறந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாரபட்சமான கருத்துக்களையும்,  எண்ணிலடங்கா தடைகளையும் எதிர்நோக்க வேண்டிய நிலையில் இருந்தும், கடினமான கணக்குகளை அறிந்து கொண்டு, அந்த கடினமான கணக்குகளில் அறியப்பட்ட தடைகளையும் கடந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றார் சந்திரா ரவீந்திரன் அவர்கள். சந்தேகமே இல்லாமல் பெண்ணுக்கே உள்ள உன்னதமான மனோதிடமும், அசாதாரணமான திறமையும் அவரது சிறுகதைகள், குறுநாவல், கவிதைகள், உரையாடல்களில் வெளிப்படுத்த பட்டுக்கொண்டிருக்கின்றன. தனது பட...

'அடிசில்'

'அடிசில்' இலக்கியச் சுவை கமழும் உணவு நாட்காட்டி காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக 'அடிசில்' என்ற பெயரில் தமிழ் இலக்கிய ரசம் சொட்டும் சுவைமிக்க ஒரு கவிதை நாட்காட்டி என் கைகளில் புரண்டு கொண்டிருக்கிறது. 'அடிசில்' என்றால் சோறு, அரிசி, அடுக்களை....எனப் பல பொருள்களைத் தருகின்றன தமிழ் அகராதிகள். "சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயில் நெய் பாலால்......' என்று சேக்கிழாரின் பெரிய புராணத்தில் ஒரு வரி வருகிறது. ஆண்டாள் பாடிய நாச்சியார் திவ்ய பிரபந்தத்தில் அடிசில் பற்றி ஒரு வரி வருகிறது. சங்க காலத்து இலக்கியப் பாடல்களில் அநேக இடங்களில்; உணவின் சுவை நயக்கக் கையாண்ட சொல்லாக இது வருகிறது. நாட்காட்டியை இன்னமும் சுவரில் தொங்கவிடவில்லை. அதை தொங்க விடுவதா அல்லது நினைத்தவுடன் புரட்டிப் பார்க்கும் வகையில் கைகளிற்குக் கிட்டவாகவே வைத்திருப்பதா என்று இன்னும் நான் தீர்மானிக்கவுமில்லை. முதற்பக்கமே ஒரு வெண்கல தூக்குச்சட்டியோடு இலக்கியத்தைச் சமைத்துண்ணத் தயாராக இருக்கிறது! பிரசாந்தி சேகரத்தின் ஒரு அருமையான நினைவுப் பகிர்வினை அள்ளிக் கொண்டு விரிகிறது சுவை சொட்டும் ...

நீயாகிப்போகும் நான்!

Image
நீயாகிப்போகும் நான்!  ------------------------------------- காலையும் மாலையுமான  நியமத்தளை அறுந்தெறிந்து  நெடுநாளாய்   அலைகிறது மனம்!  ஊனுருகித் தினம்  உயிர் கரைந்து  நினைவுகளால்  நிரம்பித்  துடிக்கிறது தினம்!  மேனியெங்கும் தணல்  மின்னலாய் கோடிழுக்கும்  காமத்தீயின் சுடர்! மோகப் பெருநதியின்   ஊற்றுக்கால் உடைந்துந்தன்  மார்பில் புதைந்தழிந்து    நீயாகிப் போகும் நான்!  நெற்றிக்கண் திறவாதுன் முகம்  கட்டி முடித்த கருங்குழல்  ஒற்றைப் பொன்முடியின்   ஓர் நுனியசைவில்    சுற்றிச் சுழன்றடிக்கும் காற்று  விட்டுவிடா விதியின் பெருங்கரத்தில்  பிரபஞ்சப் பெருவெள்ளம்!  மோனப் பெருவெளியின் மையம்  வான முகடு தொடும்  மலைகள்  காடுகளும்  நதிகளும்  கடல்களுமானதுன் காலம்!  ஆக்குவாய்  நீ  காப்பாய்   பின்னின்றழிப்பாய்  அருள் தருவாய்  தாக்குமென் தேகப்பெருந்தீயைப்   போக்குவாய்  புகுந்திடுவ...

கப்டன் மயூரன்

Image
கப்டன் மயூரன் இயற்பெயர்: பாலசபாபதி செல்லப் பெயர்: சபா பிறப்பு: 01-11-1971. வீரமரணம்: 11-11-1993 தந்தை: சபாபதிப்பிள்ளை தியாகராஜா, தாய்: சிவகாமசுந்தரி தியாகராஜா. பிறப்பிடம்: ஆத்தியடி, பருத்தித்துறை பங்குபற்றிய இறுதித்தாக்குதல்: பூநகரி தவளைப் பாய்ச்சல் தமிழீழ விடுதலையை நோக்கி இயக்கத்தில் இணைந்தது 1987- தை இணைவதற்கு தூண்டு கோலாக அமைந்த சம்பவம் யாழ் மாவட்டப் பகுதியில் சிங்கள அரச இராணுவத்தின் கட்டு மீறிய அட்டூழியம். மற்றும் சகோதரான் கப்டன் மொறிஸ் இன் விடுதலை இயக்கப்பணிகளும் அவன் இணைந்து பணியாற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழின விடுதலை நோக்கும் அசைக்க முடியாத உறுதியும்! போராட்டத்தில் இணைந்தவுடனான ஆரம்ப பயிற்சி போராளிகளின் பாலை(காடும் காடு சார்ந்த நிலமும்)நில வாழ்வுடனான போராட்டப் பயிற்சி. இணைந்திருந்த பயிற்சிக் குழு ஆரம்பத்தில் கிட்டுமாமா தலைமை. பின்னர் வீரமரணம் அடையும் வரை சொர்ணம் தலைமை. பணியாற்றிய குழு ‘ஓ’ குறூப் அல்லது ‘சைவர்’ குறூப் எனப்பட்டது. போராட்ட காலம் முழுவதும் வாழ்ந்தது தலைவரின் அருகாமை. தலைவரின் குடும்ப உறுப்பினர்களுடன் உறவாடி… விளையாடி… அதனோடு மண்ணிற்கா...
படைப்புகளிற்கான அன்பளிப்பு – சில ஞாபகங்கள்..! 4 December 2013 at 14:02 Public Friends Only Me Custom Close Friends Non Album Viewers. See all lists... Closed Friends- Non Album Relative Closed friends NO....Noting London, United Kingdom Area Family Go Back    முன்னர், எண்பதுகளில்(1980ற்குப் பின்னர்) நான் மேல்வகுப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இலங்கையில் இரண்டு தமிழ் பத்திரிகைகள் பிரசித்தி பெற்ற தேசியப் பத்திரிகைகளாக இருந்தன. ஒன்று  'வீரகேசரி ', மற்றையது  'தினகரன்'  ! வடக்கில்  'ஈழநாடு',   'ஈழமுரசு'  ஆகியவை முக்கிய பத்திரிகைகளாக மக்கள் மத்தியில் பிரபல்யமாகியிருந்தன.    முதற் தடவையாக (1981)ல் 'வீரகேசரிக்கு' என் சிறுகதையொன்றை அனுப்பி வைத்த போது அதனைப் பிரசுரித்து, அன்பளிப்பாக 30/-ரூபா இலங்கைப் பணம் காசோலையாகவும் அனுப்பி வைத்திருந்தார்கள். கதையை அனுப்பும் போது அன்பளிப்பெல்லாம் அனுப்புவார்கள் என்ற விடயம் எனக்குத் தெரியாது. அது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது! அது போலவே 'தினகரன்' பத்திரிகைக்கு ...
Image
←  சக்கரியாவின் செய்தி திண்ணையின் இலக்கியத் தடம் -8  → தமிழீழம் பற்றிய ஒரு மாய யதார்த்த சிறுகதை Posted on   November 10, 2013 by   தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்             1 Vote தமிழீழம் பற்றிய ஒரு மாய யதார்த்த சிறுகதை Magical realism என்றழைக்கப் படும் மாய யதார்த்தம் என்னும் வடிவம் கவிதைக்கும் சிறுகதைக்கும் இடைப்பட்ட வடிவம் என்றே நாம் கொள்ளலாம். கவிதைகளில் காணப்படும் கற்பனை உச்சமும் மிகவும் மனதைத் தாக்கும் உணர்ச்சிப் பெருக்கான வடிவங்கள் அல்லது சூழல்கள் அப்படியே நம் கண் முன் விரியும். தருக்கம் அல்லது தருக்கத்தால் தாங்கப் படும் யதார்த்தம் இல்லாத இந்த வடிவம் கிட்டத் தட்ட நம்மை ஒரு கனவுச் சூழலுக்கு இட்டுச் செல்வதால் மாய யதார்த்தம் என்றே நாம் கொள்ளலாம். சந்திரா ரவீந்திரன் என்னும் இலங்கைப் பெண் எழுத்தாளர் தமது “கடவுளின் உரை” என்னும் சிறுகதையில் இந்த வடிவைப் பயன் படுத்தி இருக்கிறார். காலச்சுவடு நவம்பர் 2013ல் வெளியாகி இருக்கும் இந்தக் கதையில் தமிழீழம் மையப் படுத்தப் படும் போது அவர் மாய யதார்த்த...
Image
சிறுகதை கடவுளின் உரை..! சந்திரா இரவீந்திரன் மழைக்காலத்து மஞ்சள் பூக்கள் மலர்ந்து சொரிந்திருக்கும் வீதியோரங்களில் அவர்கள் நின்றிருந்தார்கள்! தலைக்கு மேலே சாம்பல் புறாக்கள் சத்தமிடாமல் பறந்து சென்றன. ரோஜாக்களின் மணம் கமழும் மெல்லிய குளிர்காற்று இடையிடையே வீசிக் கொண்டிருந்தது. கேள்விகள் ஏதுமற்ற மயக்கம் நிறைந்த பார்வைகள் தெருவெங்கும் நிறைந்திருந்தன. வார்த்தைகளும் வசனங்களும் அங்கு வலிமையற்றுப் போயிருந்தன! பிடுங்கி வீசப்பட்ட பெருமரத்து வேரின் தளைகளைப் போல் புத்துணர்ச்சி அரும்பும் வசீகர முகத்தோடு அவர்கள் நின்றிருந்தார்கள். அடிக்கடி எல்லோர் புருவங்களும் உயர்ந்து விரிந்தன. ஒருவரையொருவர் சிநேகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். உற்சாகமும் பெருமிதமும் நிரம்பித் ததும்பும் நிமிடங்கள் அவர்களின் முன்னால் நகர்ந்துகொண்டிருந்தன! கண் இமைக்கும் நேரங்களில் சிறகு முளைத்த வெள்ளைக் குதிரைகள் அவர்களைக் கடந்து போயின. வெற்றிப் பதாகைகளைச் சுமந்ததான புன்னகைகள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டன. கிரீடம் சூட்டப்பட்ட தலைகளுடன் தாம் அழகாயும் தனித்துவமாயும் இருப்பதான பிரமையில் அனைவரும் மௌனச் சிலிர்ப்போடு வரிசையாக நின்றிருந...